தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.ஜி.ஆர் சிலை அகற்றம் - நீதிமன்றம் உத்தரவு - Madras court order

சென்னை: பொழிச்சலூரில் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர் சிலை அகற்றம்
எம்.ஜி.ஆர் சிலை அகற்றம்

By

Published : Mar 6, 2020, 5:20 PM IST

Updated : Mar 7, 2020, 7:30 AM IST

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பிரதான சாலையில் சென்ற 2014ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் சிலை, புரட்சி பாரதம் கட்சியின் கல்வெட்டுகள் சாலையோரமாக வைக்கப்பட்டுள்ளதை அகற்றக்கோரி, திமுக பிரமுகர் அந்தோணிசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 6ஆம் தேதி சிலையை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து தோமையார் மலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் தலைமையில் பல்லாவரம் காவல்துறை உதவி ஆணையாளர்கள் தேவராஜ், சங்கர்நகர், காவல்துறை ஆய்வாளர் முகமது பரக்கதுல்லா ஆகியோர் எம்.ஜி.ஆர் சிலையை ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக அகற்றினர். எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்டதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அகற்றிய எம்.ஜி.ஆர் சிலை பொழிச்சலூரில் உள்ள சோதனை சாவடி அருகே நிறுவப்பட உள்ளதாக மாவட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் சிலை அகற்றம்

இதையும் படிங்க:உருவமில்லாத கால்களை மட்டும் கொண்ட சிலை கண்டெடுப்பு

Last Updated : Mar 7, 2020, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details