தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரருக்கு சிலை திறப்பு

சென்னை ராணுவ அலுவலர்கள் பயிற்சி மையத்தில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரரின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

சென்னையில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரருக்கு சிலை திறப்பு
சென்னையில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரருக்கு சிலை திறப்பு

By

Published : Sep 22, 2022, 6:45 AM IST

சென்னையைச் சேர்ந்த கேப்டன் லட்சுமி, இரண்டாம் உலகப் போரின்போது இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) இருந்தார். அப்போது அனைத்து மகளிர் 'ராணி ஜான்சி படை’ பிரிவை உயர்த்தி சுதந்திரப் போராட்டத்தில் சிறந்த சேவையாற்றினார்.

அதேநேரம் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர்கள் பயிற்சி மையத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று பெண்களுக்கும் பயிற்சி வழங்கும் மையம் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த மையத்தில் 2,835 பெண் ராணுவ அலுவலர்கள் பயிற்சி பெற்று ராணுவத்தில் பணிபுரிந்துள்ளனர்.

பெண் ராணுவ அலுவலர்கள் தங்கும் விடுதிக்கு ‘கேப்டன் லட்சுமி’ பெயர் சூட்டப்பட்டது

இந்த பயிற்சி மையம் தொடங்கி நேற்றுடன் (செப் 22) 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, இந்தியாவின் முதல் பெண் ராணுவ அலுவலரான சென்னையைச் சேர்ந்த கேப்டன் லட்சுமிக்கு சிலை திறக்கப்பட்டது. அங்கு பயிற்சி பெறும் பெண் ராணுவ அலுவலர்கள் தங்கும் விடுதிக்கு ‘கேப்டன் லட்சுமி’ என பெயர் சூட்டப்பட்டது.

இதற்கான கல்வெட்டை சென்னை ராணுவ பயிற்சி மையத்தின் லெப்டினண்ட் ஜெனரல் சஞ்சீவ் சௌகான் தலைமையில், கேப்டன் லட்சுமியின் பேரன் ஷாத் அலி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் பிகார் தொழிலாளியை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் கைது...விசாரனையில் திடுக்கிடும் தகவல்

ABOUT THE AUTHOR

...view details