தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தமிழுக்கு தடா...! ரயில்வே துறை அடாவடி - ஆங்கிலம்

சென்னை: ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றையை தெற்கு ரயில்வே அலுவலர் அனுப்பியுள்ளார்.

File pic

By

Published : Jun 14, 2019, 12:28 PM IST

தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த தெற்கு ரயில்வே அலுவர் சிவா தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தெற்கு ரயில்வே அலுவர் சிவா சுற்றறிக்கை

அதில், 'ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள்; ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில் இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும். தங்களது பிரந்திய மொழிகளில் தகவல்களை பரிமாறக் கூடாது. இதை தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மதுரை - திருமங்கலம் ரயில் பாதையில் ஒரே நேரத்தில் இரு ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கு காரணம் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ரயில் நிலைய அலுவலர்களுக்கு ஏற்பட்ட மொழி பிரச்னையே காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சுற்றிக்கையை சிவா அனுப்பியுள்ளார். தெற்கு ரயில்வேயின் இந்த சுற்றறிக்கையால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details