தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் பேசும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும், தமிழில் பேசக் கூடாது என்றும் தெற்கு ரயில்வே அலுவலர் சிவா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழுக்கு தடா...! ரயில்வே துறை அடாவடி - இந்தி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே அலுவலர்கள் தங்களது பணி நேரத்தில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டுமென ரயில்வே துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
File pic
இது தமிழ்நாடு ரயில்வே அலுவலர்கள், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.