சென்னை:வழக்கறிஞர் சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2008ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலை, தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தேன்.
புகாரை விசாரித்த ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டது. மேலும் காவல் துறையை மீறி புகார் அளித்ததால், தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்து போலீசார் கடுமையாக தாக்கியதாக வழக்கறிஞர் சாமி மனுவில் கூறியுள்ளார்.
மேலும், சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் ஆணையத்தை அணுகிய போது, புகார் தொடர்புடைய ஐ.பி.எஸ். அதிகாரி அருண் உள்ளிட்டோர் மீது தலைமைச் செயலர் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதாகவும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்தார்.