மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.3) வெளியிட்ட புள்ளிவிபர தகவலின்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 16 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 வெளிமாநிலத்தவர் உட்பட 20 ஆயிரத்து 952 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 851 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 12 லட்சத்து 28 ஆயிரத்து 64 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்து 90 ஆயிரத்து 338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று பாதித்து 14 ஆயிரத்து 468 பேர் இறந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு :
சென்னை - 3,52,260
செங்கல்பட்டு - 84,638
கோயம்புத்தூர் - 82,689
திருவள்ளூர் - 62,504
சேலம் - 43,167
காஞ்சிபுரம் - 39,615
கடலூர் - 31,225
மதுரை - 32,883
வேலூர் - 28,061
தஞ்சாவூர் - 26,609
திருவண்ணாமலை - 24,421
திருப்பூர் - 27,716
கன்னியாகுமரி - 22,598
திருச்சிராப்பள்ளி - 25,065
தூத்துக்குடி- 25,437
திருநெல்வேலி - 26,405
தேனி - 21,202
விருதுநகர் - 20,727
ராணிப்பேட்டை - 21,727
விழுப்புரம் - 20,038
ஈரோடு - 22,817
நாமக்கல் - 16,903
திருவாரூர் - 15,774
திண்டுக்கல் - 16,481
புதுக்கோட்டை - 14,156
கள்ளக்குறிச்சி - 12,898
நாகப்பட்டினம் - 14,055
தென்காசி - 12,392
நீலகிரி - 10,101
கிருஷ்ணகிரி - 15,892
திருப்பத்தூர் - 10,478
சிவகங்கை - 8,928
தருமபுரி - 10,009
ராமநாதபுரம் - 8,996
கரூர் - 8,217
அரியலூர் - 5,736
பெரம்பலூர் - 2,741
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,001
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,074
ரயில் மூலம் வந்தவர்கள் - 428