தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றம் செய்ய நினைத்தாலே இனி சிக்கிடுவீங்க..! சென்னையில் புதிய கேமராக்கள் அறிமுகம்! - State of the art artificial intelligence

சென்னை மாநகரின் நடக்கும் குற்றங்களை தடுக்கும் விதமாக, குற்றம் செய்ய நினைத்தாலே அதை கண்டுபிடித்து அடுத்த நிமிடம் காவல்துறை நிற்கும் வகையில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 23, 2023, 11:02 PM IST

சென்னையை கண்காணிக்கும் செயற்கை நுண்ணறிவு அதி நவீன சிசிடிவி கேமராக்கள்

சென்னை: சென்னையில் குற்றங்களை குறைத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை காவல்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மேலும், பாதுகாப்பை அதிகரிக்க நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டங்களின் (Nirbhaya Safe City Project) மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் "சென்னை பாதுகாப்பான நகரம்" திட்டத்தின் கீழ் "ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூன் 23) மதியம் துவங்கி வைத்தார்.

'சென்னை காவல் எல்லை முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1,750 முக்கிய இடங்களில் மொத்தம் 5,250 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 1,336 இடங்களில் 4,008 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 1,336 கேமராக்களின் காணொளி பதிவுகள் அனைத்தும் "ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்படும். மேலும் சிசிடிவி கேமரா காணொளி பதிவுகள் சென்னையில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்படும்.

இந்த திட்டத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், குற்ற நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்யும் அம்சத்துடன் உரிய எச்சரிக்கை செய்திகளை உடனுக்குடன் வழங்குவதால், குற்ற நிகழ்வுகள் மீது உடனுக்குடன் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல் நிலையத்திற்கு அலார்ட்:குறிப்பாக, 10-க்கும் மேட்பட்டோர் ஒரு இடத்தில் கூடினால், செயின், செல்போன் மற்றும் கைப்பை பறிப்பு, பெண்களிடம் பிரச்சனை செய்தல், ஆண்களிடையே அல்லது வன்முறை சூழ்நிலையில் சிக்கியுள்ள பெண்கள், கடத்தல், பொருட்களை சூறையாடுதல், வாகனத் திருட்டு கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்துதல் சம்பவங்களை பகுப்பாய்வு செய்து உடனடியாக சம்மந்தபட்ட காவல் நிலையத்திற்கு அலார்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மென்பொருள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக' சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கேமராக்களின் நேரலை காட்சிகள் "ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில்" கண்காணிக்கப்படுவது போல, 6 காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் 12 காவல் துணை ஆணையாளர் அலுவலகங்களிலும் கண்காணிக்கும் வசதி செய்யப்படும்' எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'ஆதனின் பொம்மை' நாவலுக்காக பால புரஸ்கார் விருது பெறுகிறார் உதயசங்கர்!

ABOUT THE AUTHOR

...view details