தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை பள்ளி விபத்து: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

திருநெல்வேலியில் சாஃப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, நான்கு வாரங்களில் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிக்கைத் தாக்கல்செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்

By

Published : Dec 23, 2021, 3:19 PM IST

திருநெல்வேலி டவுனில் உள்ள சாஃப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், சுதீஷ், விஸ்வரஞ்சன் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் செல்வக்குமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, பள்ளி கட்டட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகியோர் மீது டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதானவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் எஸ். பாஸ்கரன், இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நான்கு வாரங்களில் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார்

ABOUT THE AUTHOR

...view details