தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர் நியமனத்தில் முக்கிய முடிவு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - chennai news today

Madras high court: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனத்தை எதிர்த்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 12:55 PM IST

சென்னை:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் என்பவரை உரிய வழிமுறைகளை பின்பற்றி நியமனம் செய்யவில்லை எனக்கூறி, திருவண்ணாமலையை சேர்ந்த T.S. சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அரசாணையோ அல்லது இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்போ இல்லாமல் ஜீவானந்தம் என்பவர் கடந்த ஜூலை 1ம் தேதி பதவியேற்றதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவராக செயல்பட தடை விதிக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ். சௌந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க :சென்னை உயர் நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

அப்போது, தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, அறங்காவலர் குழு தலைவராக பின்வாசல் வழியாக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதாக கூறுவது தவறு என்றும், உரிய வழிமுறைகளை பின்பற்றியே நியமனம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், அவரது சகோதரர் அரசியல் கட்சியில் இருப்பதற்கும், ஜீவானந்தம் நியமனத்திற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ். வீரராகவன், கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜூலை மாதம் 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், ஒன்றாம் தேதியே அமைச்சரால் அறிவிக்கப்பட்டதாக கூறினார்.

இதனையடுத்து, அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் செயல்பட தடை விதிக்க கோரிய மனுதாரரின் மனுவை ஆறு வாரங்களில் பரிசீலித்து சட்டப்படி முடிவெடுக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் பவரை பறித்த ஆட்சியர்.. தென்காசியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details