தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்ட மாநில அரசு நடவடிக்கை - Docking in the middle of the boat

சென்னை: ஏமன் நாட்டுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கியிருப்பதால் அவர்களை பத்திரமாக மீட்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Minister Jayakumar
அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Nov 30, 2019, 8:38 AM IST

ஏமன் குடியரசு நாட்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் நியூட்டன், எஸ்களின், அமல் விவேக், சாஜன், சகாயம், ஜெகன் மற்றும் சகாய ரவிக்குமார் ஆகிய ஏழுபேர் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். அந்நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் ஏற்பட்ட பழுது காரணமாக படகு கடலில் மூழ்கியது. இதனால் 7 மீனவர்களும் லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கினர்.

இதைத்தொடர்ந்து லட்சத் தீவு பகுதியில் கரை ஒதுங்கியிருக்கும் மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் சார்பில் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற அரசு மீனவர்களை பத்திரமாக மீட்டு கொச்சி துறைமுகம் அழைத்து வரப்பட உள்ளனர். மேலும் அவர்களை தமிழ்நாடு அழைத்து வரும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என மீன்வள துறை ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்

ABOUT THE AUTHOR

...view details