தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

By

Published : Sep 21, 2021, 9:40 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதன்படி, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி நாளை (செப். 22) நிறைவு பெற உள்ளது. அனைத்து கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

விவசாயி சின்னம் ஒதுக்கீடு

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கவேண்டும் என அக்கட்சி கோரிக்கை வைத்தது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையும் படிங்க: ஒன்பது மாவட்டங்களில் ரூ.50,000-க்கும் மேல் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details