தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறுதிக் கட்டத்தை எட்டிய மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு பணி!

தமிழ்நாட்டிற்காக தனித்துவமாக உருவாக்கப்படும் மாநிலக் கல்விக்கொள்கையை இறுதி செய்ய குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் ஒப்புதல் கேட்பதற்கான சிறப்பு அமர்வுக்கு வரும் 30-ம் தேதி அதன் தலைவரும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான முருகேசன் ஏற்பாடு செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 12:38 PM IST

சென்னை: தேசியக் கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பினை தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிந்தது. கல்வியாளர்கள், அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டு அறிந்து உள்ளனர். மேலும் அறிக்கைகளை எழுத்து வடிவமாக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கான கருப்பொருள்களையும் வடிவமைத்து வந்தனர். ஆனால் இந்தக்குழுவின் காலம் 2023 மே மாதம் முடிவந்த நிலையில், பணிகளை முடிப்பதற்கு செப்டம்பர் மாதம் வரையில் கால அவகாசம் கேட்டது உயர்மட்டக்குழு. அதனை ஏற்று தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் வழங்கி உள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக்குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினரிடம் பெற்றக் கருத்துகளைத் தொகுத்து வந்தனர். மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும் ,தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறுத் தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கருத்துகளை தொகுத்து பரிந்துரையாக செப்டம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே குழுவின் அறிக்கையை அரசிற்கு சமர்ப்பிதற்கு முன்னர் குழுவின் உறுப்பினர்களின் கருத்தை கேட்டு ஒப்புதல் பெறுவதற்கு ஆகஸ்ட் 30 ந் தேதி குழுவின் தலைவரும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதியுமான முருகேசன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் குழுவின் உறுப்பினர்கள் கூறும் கருத்தின் அடிப்படையில் அரசிடம் செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக் கொள்கை சமர்பிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க :தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் செல்லவிருந்த விமானங்கள் தாமதம் - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details