தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 18ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்குவதையொட்டி பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடைந்தது. எனவே, வெளியூரில் சென்று பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜனநாயக கடமை ஆற்ற சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
தேர்தல் நாளன்று ஐ.டி நிறுவனங்களுக்கு கட்டாய விடுமுறை! - parlement election
சென்னை: ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் தேர்தல் நாளில் கட்டாயமாக விடுப்பளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் தேர்தல் நாளில் விடுப்பளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக தொழிலாளர் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 18ஆம் தேதியன்று வணிக நிறுவனங்கள், கடைகள், விடுதிகள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் அமைப்புகளுக்கும் கட்டாயம் விடுமுறை வழங்கி பொதுமக்கள் வாக்களிக்க ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை விடப்படாமல் இருக்கும் நிறுவனங்கள் குறித்து, தமிழக தொழிலாளர் ஆணையர்களிடம் புகார் தெரிவிக்கலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.