சென்னை தலைமைச் செயலகத்தில், பாஜக சார்பில் சுமார் ஒரு லட்சம் முகக்கவசங்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இன்று(ஜூன்.9) வழங்கப்பட்டது.
பாஜக சார்பில் ஒரு லட்சம் முகக்கவசங்கள் வழங்கல்! - செறிவூட்டும்
சென்னை: பாஜக சார்பில் ஒரு லட்சம் முகக்கவசங்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடம், அக்கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாஜக விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறுகையில்,"மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு இந்த மாதம் மட்டும் 45 லட்சம் தடுப்பூசி குப்பிகள் வரும் எனவும், இன்று (ஜூன்.9) ஆறு லட்சம் தடுப்பூசி குப்பிகள் வந்துள்ளன.
பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு உதவும். தொற்றுத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு அரசுக்கு, பாஜக உறுதுணையாக இருக்கும்" என்றார்.