சென்னை: தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூரில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் (ஜுன் 13) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து அலுவலர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வரவைக்கப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியின் வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு இருப்பதாகவும், அவ்வங்கியில் பணப்பரிவர்த்தைகள் செய்யப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் உறவினர்களுக்கு அந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப் போவதாக கூறியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில், அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் நடைபயிற்சி சென்று இருந்த செந்தில் பாலாஜி அவசரமாக வீடு திரும்பினர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு தவிர்த்து அவரின் சகோதரர், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்தங்களுடைய 40 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செந்தில் பாலாஜியின் சகோதரர் கோகுல் மற்றும் அசோக் என்பவர் வீட்டிலும் நான்கு நாட்களாக சோதனையில் ஈடுப்படனர்.