சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புதிய ரத்த தான செயலியை அறிமுகப்படுத்திவைத்தார். அவசர நேரங்களில் ரத்தம் தேவைப்படுபவர்கள் இந்த செயலியில் பதிவு செய்தால், உடனடியாக ரத்தம் கிடைத்திடும்படி தி.மு.க மாநில மருத்துவ அணி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இந்த செயலி மூலம் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ரத்த தானம் செய்யலாம். இந்த செயலி 24 மணிநேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
திமுக சார்பில் 24 மணி நேர ரத்த தான செயலி தொடக்கம்...
சென்னை: ரத்ததானத்தை ஊக்குவிக்கும் விதமாக, திமுக மருத்துவ அணி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ரத்த தான செயலியை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மு.க ஸ்டாலின்
"DMK blood donation App" என்ற பெயரில் உள்ள இந்த செயலியை பதவிறக்கம் செய்து பயனடையலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரத்தம் தேவைப்படுவோர் மற்றும் ரத்த தானம் செய்ய விரும்புவோர் அவர்களது விவரங்களை செயலி மூலம் பதிவு செய்து கொள்ளவேண்டும் என திமுக மருத்துவ அணி கூறியுள்ளது. இந்த நிகழ்வில் திமுக மருத்துவரணி செயலாளர் பூங்கோதை ஆலடி அருணா உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.