சென்னை: கார் மீது 2 கிலோ மீட்டர் தொங்கியவாறு பயணித்து குற்றவாளிகளைக் கைது செய்த காவலருக்கு மாதத்தின் நட்சத்திர விருது சென்னை மாநகர காவல் ஆணையரால் வழங்கப்பட்டது.
சென்னை காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்கு அவர்களது, தினசரி நற்பணியைப் பாராட்டும் விதமாக சான்றிதழ்களும் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு மாதத்தின் நட்சத்திர காவலர் விருதினை வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் தலைமையில் ஒரு குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
காரின் மீது தொங்கியவாறு 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து குற்றவாளிகளைக் கைது செய்த காவலருக்கு மாதத்தின் நட்சத்திர விருது அந்த வகையில் சென்னை காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாதத்தின் நட்சத்திர காவலர் விருதினையும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
சேத்துப்பட்டு காவல் நிலைய தலைமைக்காவலருக்கு நட்சத்திர விருது
இதன்படி முதன்முறையாக சேத்துப்பட்டு காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைமைக் காவலர் சரவணக்குமார் கடந்த மாதம் 73 வயது முதியவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் எழும்பூர் பகுதியில் சுற்றி வருவதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில்,
குற்றவாளிகள் சென்ற காரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, கார் மீது ஏறி இரண்டு கிலோமீட்டர் தொங்கியவாறு சென்று பொதுமக்கள் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடித்துள்ளார்.
காரின் மீது தொங்கியவாறு 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து குற்றவாளிகளைக் கைது செய்த காவலருக்கு மாதத்தின் நட்சத்திர விருது இவருடைய இந்தச் சிறப்பு மிக்க பணியைப் பாராட்டி இந்த மாதத்தின் நட்சத்திர காவலர் விருதினை சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் பணமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளார்.
இதையும் படிங்க:’கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அமைப்பு குற்றங்களைக் குறைக்கும்’