சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் நாளைமுதல் நேரடியாகத் திறந்து செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி,கல்லூரிகள் திறப்பு: மாணவர்களே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை! - Standard guidelines for opening schools and colleges
பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
பள்ளி,கல்லூரிகள் திறப்பு
அதன் அடிப்படையில் பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில்,
- 1 முதல் 12ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் நாளை முதல் நேரடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- குழுவாக அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கக் கூடாது.
- கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- அனைவரும் வாய், மூக்கை மூடும் வகையில் முகக்கவசத்தை அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும்.
- கை கழுவுதல் அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
- தினமும் பள்ளி வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- ஆசிரியர்கள், 15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
- கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகைதரக் கூடாது.
- காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- பள்ளி வளாகங்களில் எச்சில் துப்புவதைத் தடுக்க வேண்டும்.
- மாணவர்கள் வருவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித்தனியாக வழிகளை உருவாக்கலாம்.
- பள்ளிகளில் ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் நடத்துவதை அந்தப் பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து முடிவு செய்துகொள்ளலாம்.
- இந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதைச் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இதையும் படிங்க : தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்