இது குறித்து தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா தொற்று காரணமாக பல்வேறு வணிக நிறுவனங்களில் முத்திரையிடப்பட வேண்டிய எடைகள், அளவைகள், எடையளவு இயந்திர முறை, மின்னணு தராசுகள், எடை பாலங்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பம்புகள், இதர எடையளவுக் கருவிகளைச் சமூக விலகல் காரணமாக மறுமுத்திரையிட இயலவில்லை என்று பல்வேறு தொழில் நிறுவன சங்கங்களிடமிருந்து கோரிக்கைவரப்பட்டுள்ளது.
'முத்திரையிடாத எடையளவுகளை கூடுதல் கட்டணமின்றி மறு முத்திரையிட்டுக் கொள்ளலாம்'
சென்னை: முத்திரையிடாத எடையளவுகளை ஆகஸ்ட் மாதம் வரை கூடுதல் கட்டணம் ஏதுமின்றி மறு முத்திரையிட்டுக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது.
Stamp weights can be re-stamped at no additional cost'
அதனை பரிசீலித்து 2020 மார்ச் 31, 2020 ஜூன் 30 ஆகிய காலாண்டுகளில் முத்திரையிடாத எடையளவுகளை எதிர்வரும் 2020 செப்டம்பர் 30 வரை கூடுதல் கட்டணம் ஏதுமின்றி, அந்தந்தப் பகுதியிலுள்ள சட்டமுறை எடையளவுகள் ஆய்வாளர், எடையளவுகள் உதவிக் கட்டுப்பாட்டு அலுவலர்களிடம் மறு முத்திரையிட்டுக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.