தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதை சபாநாயகர் தனபால் அவைக் குறிப்பிலிருந்து நீக்கியுள்ளார். விவாதங்கள் பின்வருமாறு:
ஸ்டாலின்:ரூ.92,948 கோடிக்கான அறிவிப்புகள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு என அறிவிக்கப்பட்டுள்ளது; இதற்கான நிதி எங்கிருந்து வரும்?
எடப்பாடி பழனிசாமி: இந்த அறிவிப்பில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் என எதுவும் இல்லை; அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்டாலின்:இரண்டாவது முறையாக ஆட்சியில் நீடித்தும் ஏன் நிதி நிலையை சரிசெய்ய முடியவில்லை?
ஓ. பன்னீர்செல்வம்:மத்திய அரசால் வழங்கப்பட்டுவரும் நிதிக்குறைவே தற்போதைய நிதிப் பற்றாக்குறைக்கு காரணம். சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய தொகுப்பிலிருந்து குறைந்துவருகிறது. மேலும் மத்திய அரசின் பங்கை குறைத்து அதிகபட்சமாக மாநில அரசின் தொகையில் சேர்த்துவிட்டனர். இதனால் ரூ. 3500 கோடி நிதிச்சுமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.