தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாகித்ய அகாதமி விருதாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து... - sahitya akademi

சாகித்ய அகாதமி விருது பெற்றவர்களுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

sahitya akademi award winner  stalin wishes  cmstalin  stalin  stalin wishes for sahitya akademi award winner  sahitya akademi  sahitya akademi award
ஸ்டாலின்

By

Published : Sep 18, 2021, 10:38 PM IST

சாகித்ய அகாதமி விருது பெற்றவர்களை வாழ்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாழ்த்து செய்தி ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அதில், “உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலகமெங்கும் எடுத்துச் செல்லும் அறிவிப்பு பண்டமாற்று என்பது பெரும்பணி அரும்பணி.

அத்தகைய அரும்பணியில், மொழிப்பெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, வங்கத்து கவிஞர் தாக்கூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா. செல்லப்பன், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன், கவிஞர் சல்மாவின் இரண்டான் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவங்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடப்பேன்- தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என். ரவி

ABOUT THE AUTHOR

...view details