தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி செய்த தவறை ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர்பாபு - கருணாநிதி

சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களை அர்ச்சகராக்கியது கருணாநிதி செய்த தவறு என்றால் அந்த தவறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் செய்வார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சேகர்பாபு
சேகர்பாபு

By

Published : Aug 17, 2021, 10:56 AM IST

Updated : Aug 17, 2021, 11:52 AM IST

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.

அதன்படி சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் சுஹாஞ்சனா என்ற பெண் ஓதுவார் தற்போது பணியில் உள்ளார். ஆனால், அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு தரப்பு விமர்சித்துவருகிறது.

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 14ஆம் தேதி இந்து சமய அறநிலைய துறை கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்புவது நிமித்தமாக 216 காலி பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதில் 58 நபர்கள் கோயில் அர்ச்சகர் இரண்டாம் நிலையில் ஆகம விதிப்படி முறையாக தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். யாரும் எப்போதும் மேலே வரக்கூடாது எனும் சில விஷமத்தனமானவர்கள் சில கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

உருகாத மனம்கூட உருகும்

35 வயத்துக்குள்பட்ட இளைஞர்கள் 58 பேரை இன்று திருக்கோயில் பணியாளராக நியமித்துளோம் அடுத்த தலைமுறைக்கு என சீர்திருத்த நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். பட்டாச்சாரியார்களையோ, அர்ச்சகர்களையோ பணி நீக்கம் செய்ய வில்லை.

இந்த அரசை அர்ச்சகர்களுக்கு எதிரான அரசை போன்று சிலர் சமூக ஊடகங்களில் சித்தரிக்கின்றனர். வேலை இல்லாமல் இருப்பவர்கள் இது போன்ற பிரச்னைகளை முன்னெடுகின்றனர்.

வெளிப்படைத்தன்மையோடு கோயில்களில் உரிய பணிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். தேனுபுரீஸ்வரர் கோயிலில் சுஹாஞ்சனா எனும் பெண் ஓதுவாரை நியமித்துள்ளார் அவர் பாடும் பாடலை கேட்டால் உருகாத மனம்கூட உருகும்.

சீரமைக்கும் முதலமைச்சர்

சீர்கெட்டு இருந்த இந்து சமய அறநிலைய துறையை முதலமைச்சர் சீர் செய்கிறார். சுப்பிரமணிய சாமியின் மிராட்டல்களுக்கு பணியும் அரசு தமிழ்நாடு அரசு அல்ல.

சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு

1971 இந்து சமய அறநிலைய சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டு பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு, 60 வயதுவரை அர்சகர்களுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் தவறை ஸ்டாலினும் செய்வார்

ஒடுக்கப்பட்ட மக்களை கருணாநிதி அர்ச்சகராக்கியது தவறு என்றால் அதே தவறை முதலமைச்சர் ஸ்டாலினும் கட்டாயம் செய்வார். நாகநாத சாமி கோயிலில் ஒரு அர்ச்சகர் இரண்டு கோயில்களில் பணியாற்றுகிறார்.

இந்து சமய அறநிலைய துறையின் 627 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளோம். பரம்பரை அறங்காவலர் எனும் பெயரில் சொத்துக்களை சூறையாடியவர்களை சட்ட ரீதியாக நீக்கியிருக்கிறோம்” என்றார்.

Last Updated : Aug 17, 2021, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details