தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் ஒரு துக்ளக் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சென்னையில் கிராம சபைக் கூட்டம் நடத்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு துக்ளக் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Jan 6, 2021, 5:04 PM IST

சென்னை திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அரசு அறிவித்த 2,500 ரூபாய் பொங்கல் பரிசு பொதுமக்களுக்குத் தெரியும்படி நியாயவிலைக் கடைகளில் சிறிதாக பேனர் வைத்தோம். ஆனால் திமுக எல்லா கடைகளிலும் பேனர் வைத்துள்ளனர். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் தலைமைக் கழகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் கமல்ஹாசன் எம்ஜிஆர் கொள்கையை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் இணைந்துகொள்ளலாம் எம்ஜிஆர் படத்தை வைப்பதற்குப் பதிலாக எங்கள் கட்சியில் சேர்ந்துவிடுங்கள். திமுக ஆட்சி என்பது எட்டாக்கனி ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது.

ஆயுள்வரை வருங்கால முதலமைச்சர் என்று போஸ்டர்தான் ஓட்ட முடியும். திமுக இனிமேலும் தமிழ்நாட்டில் தலைதூக்க வழியில்லை.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

கிராமம் இருக்குமிடத்தில்தான் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். ஆனால் சென்னையில் கிராம சபைக் கூட்டம் நடத்தும் ஸ்டாலின் ஒரு துக்ளக். தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாத பிரசாந்த் கிஷோர் வழியில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் நடக்கிறார். மு.க. ஸ்டாலின் இனி பி.கே. ஸ்டாலின்" என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் மக்கள் கிராம சபையால் மக்களுக்கு பயன் இல்லை: முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details