இந்தியாவில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற விதி மூன்று ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக நீட் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் மையங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் பயிற்சி மையங்கள் முக்கிய தொழிலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதில் கர்நாடகாவில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடிக்கும் மேலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வு அமலுக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் நீட் பயிற்சி மையங்களின் வருவாய் பெருவாரியாக அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.