சென்னை: கடந்த மே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் எளிமையான முறையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்டாலின். கடந்த ஒருமாத காலமாக கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்திவந்தது.
பத்தரை மணிக்கு பிரதமர் இல்லத்தில்
பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழ்நாடு அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஜூன் 17ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 16) தனி விமானம் மூலம் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார். இச்சந்திப்பின்போது செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி அளிப்பது, கரோனா சிறப்பு நிவாரண நிதிப் பங்கீடு, தடுப்பூசியை அதிகளவில் ஒதுக்குவது, நீட் தேர்வு உள்ளிட்ட தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து ஸ்டாலின் விரிவாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்டாலின், மோடி சந்திப்பு நடைபெற்ற பழைய புகைப்படம் மோடிக்குப் பின் சோனியா
தொடர்ந்து டெல்லியில் கட்டப்பட்டுவரும் திமுக கட்சி அலுவலகத்தை நாளை மதியம் பார்வையிடுகிறார். ஜூன் 18ஆம் தேதி காலை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்து வாழ்த்துப்பெறுகிறார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!