தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஒன்றிணைவோம் வா’ - மக்களுடன் ஸ்டாலின் உரையாடல் - ‘ஒன்றிணைவோம் வா’

சென்னை: ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் மூலம் பயன்பெற்ற 50 பொதுமக்களுடன் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Apr 25, 2020, 11:28 PM IST

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கால் பாதிப்படையும் ஏழை எளிய மக்களுக்கு திமுக சார்பாக ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் அடிப்படை உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதன் மூலம் பயனடைந்த மக்களுடன் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை பேசியுள்ளார்.

மக்களுடன் உரையாடும் ஸ்டாலின்

அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த உதவிகள் குறித்தும், அவர்கள் பகுதியில் கரோனா நோயின் தாக்கம் மற்றும் ஊரடங்கு குறித்தும் விசாரித்தறிந்தார்.

‘ஒன்றிணைவோம் வா’

பின்னர், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து பிற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details