தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரும்' - மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்னும் 3 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin
ஸ்டாலின்

By

Published : Feb 10, 2021, 4:21 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் ஐந்தாவது பேட்சாக டேலி பயற்சி முடித்த 81 மாணவிகளுக்கு மடிக்கணினி, சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், "எத்தனை பணிகள் இருந்தாலும் இந்தப் பணிதான் எனக்கு முக்கியமான பணி. இந்த தொகுதிக்கு வரும்போதே என்னை அறியாமல் எனக்கு ஒரு மகிழ்ச்சி வந்துவிடும். அதிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி நிகழ்ச்சி என்று சொன்னால் அதைவிட அதிகமான அளவிற்கு மகிழ்ச்சி வந்துவிடும். பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும், யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது, சுயமரியாதை உணர்வோடு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறவன் நான்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

இன்றைய தமிழ்நாட்டை பொறுத்தவரை வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்னையாக இருந்துகொண்டிருக்கிறது. படித்தவர்களுக்கு வேலை இல்லை. வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் அலுவலகத்தில், லட்சக்கணக்கில் வேலை கேட்டுப் படித்த பட்டதாரிகள் பதிவு செய்து கொண்டிருக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுபற்றி இப்போது இருக்கும் ஆட்சிக்கு எந்த கவலையும் இல்லை. அதனால்தான் இன்றைக்கு இளைஞர்களின் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆசிரியர்கள் சொன்னதைப் போல், இன்னும் 3 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும் உருவாக்கப்போகிறோம். உறுதியாகச் சொல்கிறேன், தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு இந்தக் கட்சியின் தலைவர் என்கிற முறையில் இப்போதே சொல்கிறேன், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:கேந்திரிய வித்யாலயாவில் தமிழுக்கு இடமில்லையா? - வைகோ கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details