தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல்செய்துள்ள நிலையில், அதன் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையின் நான்காவது நாளான இன்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,
"காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 9ஆம் தேதி அறிவித்திருக்கிறார்.
அப்போது, புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறினாரே தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
அதேபோல், கடந்த 10ஆம் தேதியன்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்திலும், அதுபற்றிக் குறிப்பிடப்படவில்லை. எனவே அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டங்களையும், ஏற்கனவே அறிவித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் ரத்துசெய்தால்தான் பாதுகாக்கப்பட்ட, சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு சாலச் சிறந்ததாக அமைந்திட முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் பார்க்க:‘சபாநாயகர் மகா உத்தமர்’ - துரைமுருகன் நையாண்டி