தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறையிலேயே உயிரிழந்தனர்.இச்சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடைபெறுவது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா ? - ஸ்டாலின் சாடல்! - tuticorin lockup death
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியா? அல்லது காவல்துறையின் ஆட்சியா? என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

stalin
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தின் கதறல் நெஞ்சை பதறச் செய்கிறது! உடுமலை சங்கரின் ஆணவக்கொலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்காமல் கடமை தவறியிருக்கிறது காவல்துறை! இது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா? ஏவல்துறையாக மாறிவிடாமல் பொறுப்பு உணர்ந்து காவல்துறை செயல்பட வேண்டும்! ” எனப் பதிவிட்டுள்ளார்.