தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு ரூபாய் திட்டமானாலும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் - ஸ்டாலின் - ஸ்டாலின் உரை

ஒரு ரூபாய் கூட சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும், அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

district collector conference  stalin speech in district collector conference  stalin speech  மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  ஸ்டாலின் உரை  மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ஸ்டாலின் உரை
ஸ்டாலின்

By

Published : Mar 11, 2022, 2:09 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாட்டின், இரண்டாவது நாள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து தெரிவிக்க வேண்டும்" என்றார்.

மக்கள்தான் எஜமானர்கள்

தொடர்ந்து பேசிய அவர், “அரசியல்வாதிகளுக்கும் அலுவலகர்களுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும்” என்றார்.

மேலும் பேசிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருள்கள் கிடைக்கிறது, அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்களாக இருக்கலாம். அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அரசுக்கு வருமானம் பெறுவது என்பது குறித்தும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் குறுந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை ஆட்சியர் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இதையடுத்து, நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து அலுவலர்கள் ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம் எனவும், அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை கேட்பதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாதம் ஒருமுறை மண்டலத்துக்கு ஒரு "வரும் முன் காப்போம் திட்ட" சிறப்பு முகாம் - மேயர் பிரியா

ABOUT THE AUTHOR

...view details