தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது - ஸ்டாலின் ட்வீட்

திருவள்ளுவர் போலத் தமிழுக்குப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

By

Published : Nov 4, 2019, 4:35 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு, இதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா - முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details