நகைச்சுவை நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர். ஜார்ஜியாவில் 'தளபதி 65' படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் சென்னை திரும்பியவுடன் நேற்று (ஏப்.26) விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விவேக் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின்! - விவேக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின்
சென்னை: மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
stalin
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஏப்.27) விவேக்கின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலை தெரிவித்தார்.