சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் தனது இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணவிழா அழைப்பிதழை முக ஸ்டாலினிடம் வழங்கினார். ரஜினிகாந்த்-ன் மகள் சௌந்தர்யாவிற்கு வரும் 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இது அவருக்கு இரண்டாவது திருமணமாகும்.
திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்! - meet
சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை நேரில் சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த்
இதற்கு முன்னதாக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். அப்போது அங்கு விசிக தலைவர் திருமாவளவனும் இருந்தார். அது தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு தமது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க சென்றதாக தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பின் போது பொதுவான அரசியல் குறித்து பேசியதாகவும் அவர் கூறினார்.