இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும் தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். திமுக ஆட்சியில்தான் மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது. கலைஞர் முதன் முதலில் முதலமைச்சராக இருந்த போது தொழிலாளர் நலனுக்கு தனியாக ஒரு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. “நேப்பியர் பூங்கா” மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இன்றும் அது தொழிலாளர்களின் நினைவுபோற்றும் சின்னமாகத் திகழ்கிறது.
தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து கூறிய ஸ்டாலின்! - திமுக
சென்னை: உரிமைகளை நினைவு கூறும் மே.1 தேதியன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்து தெரிவித்து சார்பாக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின்
புதிதாக மத்தியிலும் - மாநிலத்திலும் அமையப் போகும் ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றவும், கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க. அரசிடம் இழந்துவிட்ட உரிமைகளை மீட்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் சபதமேற்றுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறப்பட்டுள்ளது.