தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செயற்கை புல் கால்பந்து மைதானம்: அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின் - singara chennai 2 0

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானம், சுற்றுச் சுவர், நடைபாதை உள்ளிட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “சிங்காரச் சென்னை 2.0” திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “சிங்காரச் சென்னை 2.0” திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

By

Published : May 26, 2022, 1:32 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னையைச் சிங்காரச் சென்னையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவடைந்தது.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல், கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் நகரத்தை மறுவடிவமைத்து, உலகின் சிறந்த நகரங்களுக்கு இணையாக மாற்றுவதே ஆகும்.

செயற்கை புல் கால்பந்து மைதானம்

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே. 26) சென்னை, கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் 1 கோடியே 86 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை புல் கால்பந்து மைதானம், 30 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர், 7 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, 24 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம் மற்றும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, கண்காணிப்புக் கேமராக்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 2 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரூட் கிளியர் Vanakkam Modi : டேக் டைவர்சன் Go Back Modi - ட்விட்டர் அட்ராசிட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details