தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி - மோடிக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்!! - PM modi

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

உலக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கமாட்டார்!!
உலக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கமாட்டார்!!

By

Published : Jul 15, 2022, 1:00 PM IST

சென்னை: கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் தொலைபேசி வாயிலாக உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் உடல் நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர், அவரிடம் தான் குணமடைந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் சென்னையில் ஜூலை 28ஆம் தேதி துவங்கும் உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு மோடிக்கு அழைப்பு விடுக்க ஸ்டாலின் நேரில் செல்வதாக இருந்தது.


இதனை குறிப்பிட்டு தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அழைப்பு விடுக்க அனுப்பி வைப்பதாகவும், துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் பங்கேற்க வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல்: சென்னை ஐஐடி முதலிடம்

ABOUT THE AUTHOR

...view details