சென்னை:தஞ்சாவூர் மாவட்டம் உள்ள களிமேடு கிராமத்தில் நடந்த சித்திரை தேரோட்ட விழாவில் உயர் அழுத்த மின் கம்பி மீது தேர் மோதியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, உயிரிழந்தவர்களுக்கு இன்று (ஏப்.27) சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பேசிய முதமைச்சர் ஸ்டாலின், "தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம், காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 25 லட்சத்து 50 ஆயிரம் நிவாரணம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலை தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பரிதாபம்.. தஞ்சை தேர் விபத்தின் கோரம்...