தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மிஸ் யூ அப்பா’ - தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்! - Stalin dmk

சென்னை: உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின்

By

Published : Jun 16, 2019, 8:03 PM IST

உலகம் முழுவதும் தந்தையர்களின் மேன்மையை போற்றிக் கொண்டாடும் விதமாக தந்தையர் தினம் இன்றுகொண்டாடப்பட்டு வருகிறது.

அதற்கான வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர்.

உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் அவர் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்ததில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கருணாநிதிக்கு அண்ணா எப்படி அரசியல் ஆசானாக திகழ்ந்தாரோ, அதுபோல் தான் ஸ்டாலினுக்கு கருணாநிதி விளங்கிவருகிறார்.

இந்த நிலையில், கருணாநிதியை நினைவுகூர்ந்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு திமுகவினர் இடையே உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details