மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசை விமர்சித்தும் ஸ்டாலின் பேசியது தொடர்பான செய்தி, முரசொலி நாளிதழில் செப்டம்பர் 4, டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வெளியானது.
இதையடுத்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கோரினார்.
ஆனால், ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாகவும், வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:' மிஸ்டர் ஸ்டாலின்! கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர உங்களிடம் வேறு என்ன இருக்கிறது'