திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழ் நாட்டில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், தனது இல்லத்தில் வைத்து சுகாதாராத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை - கரோனா தொற்று
சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அரசு அலுவலர்களுடன் அவரது வீட்டில் வைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கரோனா தடுப்பு, மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எவ்விதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருந்துகள் வழங்க அரசு வழங்க ஏற்பாடு செய்தல், சென்னை போன்று தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கமாறு வலியுறுத்தப்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன், மருந்து பொருட்கள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாக ஸ்டாலின் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.