இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோட்டில் இரண்டு பத்திரிக்கையாளர்களை ஆளும் கட்சியினர் தாக்கியது கண்டனத்திற்குரியது என்றும், சமீபகாலமாக செய்திகளை சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து களையப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தாமதமின்றி மடிக்கணினி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஜனநாயக ரீதியில் போராடிய மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது காட்டுமிராண்டித்தனம் என கண்டித்துள்ள அவர், பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய ஆளும்கட்சி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.