சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து திமுக தனது இளைஞரணி, மகளிரணி, தொழில்நுட்ப அணி என அனைத்து பிரிவுகளையும் பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றது. குறிப்பாக, திமுக தகவல் தொழில்நுட்ப அணி, மக்கள் தொடர்பு துறையை பலப்படுத்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி தமிழ்நாட்டை மேம்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 20 லட்சம் பேரின் கருத்துக்களை அறியவும், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை சமூக வலைதளம், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மூலம் பகிரும் வண்ணம் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.