தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு தேர்வு துறை இயக்குனர்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் நாளை மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

By

Published : Aug 22, 2022, 8:54 PM IST

சென்னை:அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமாவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணை தேர்வு முடிவுகள் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.im என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளீடு செய்து மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 25, 26 ஆகிய செய்திகளில் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மறுக்கூட்டல் கட்டணமாக பாடம் ஒன்றுக்கு 205 ரூபாய் வீதம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மறு கூட்டல் முடிவுகள் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ABOUT THE AUTHOR

...view details