தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2020, 12:30 PM IST

Updated : Jun 9, 2020, 1:01 PM IST

ETV Bharat / state

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் பழனிசாமி

SSLC exam cancelled - TN CM
SSLC exam cancelled - TN CM

12:27 June 09

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து - முதலமைச்சர் பழனிசாமி

பத்தாம் வகுப்பு மாணர்வகளுக்கான பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்ததற்கு, பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. குஜராத், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவித்தது. தமிழ்நாடும் இதை பின்பற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி எனவும் அறிவித்துள்ளார்.

கரோனா நோய் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள வேளையில், தேர்வு நடத்துவது சரியான முடிவாக இருக்காது என வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனையை ஏற்று, முதலமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 விழுக்காடும், வருகைப்பதிவேடு அடிப்படையில் 20 விழுக்காடும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூழலுக்கு ஏற்ப தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 9, 2020, 1:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details