கரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்களை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள் நடத்தப்படும் - இந்து சமய அறநிலைய துறை
சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், நிறுத்தப்பட்ட ஐந்து விழாக்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் நடத்துவது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.
அப்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அலுவலர்கள், மத தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட ஐந்து விழாக்களை நடத்த முடிவெடுக்கப்பட்டதாகவும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், விழாக்களை கோயில் மரபுகளின்படியும், ஆகம விதிகளின்படியும் விரைந்து நடத்த கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.