இலங்கையைச் சேர்ந்த கணபதிபிள்ளை துரைசிங்கம், லண்டனில் வசித்துவந்தார். 2001ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதியன்று சென்னை வந்த அவர், எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
பின்னர், லண்டனுக்குத் திரும்புவதற்காக எழும்பூரிலிருந்து, ஸ்டீபன் செல்லதுரை என்பவரின் ஆட்டோவில் ஏறி விமான நிலையத்திற்குச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், விமான நிலையத்துக்குச் செல்லாமல், கொரட்டூர் பகுதிக்கு ஆட்டோ ஓட்டுநர் துரைசிங்கத்தை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தனது நண்பரான எலியாஸ் என்வரை வரவழைத்த ஆட்டோ ஓட்டுநர், கணபதிபிள்ளை துரைசிங்கத்திடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு அவரை இருவரும் கொலை செய்துள்ளனர்.
கொலைக் குற்றவாளிகளான இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு, இருவரையும் கைது செய்தனர். ஜாமினில் விடுதலையான எலியாஸ் தலைமறைவாகி விட்டதால், ஸ்டீபனுக்கு எதிரான வழக்கை விசாரித்த ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: மூதாட்டி கழுத்து அறுத்துக் கொலை; சிக்கியது சிறுவனின் சிசிடிவி காட்சி