தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை குண்டுவெடிப்பு... நெஞ்சைப் பிளக்கும் உயிர்ப்பலி!  வைகோ கண்டனம் - வைகோ கடும் கண்டனம்

சென்னை: இலங்கை குண்டுவெடிப்பு இருதயத்தை நடுங்க வைக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ கடும் கண்டனம்

By

Published : Apr 21, 2019, 10:48 PM IST


இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகையினை ஒட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது, இன்று காலை 8.45 மணியளவில் அங்குள்ள ஆறு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் 207 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தை கேட்டு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகம் முழுவதிலும் இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்று உள்ள செய்தி இருதயத்தை நடுங்க வைக்கிறது. ஈவு இரக்கமற்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கொலைபாதகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

கொச்சிக்கடா புனித அந்தோணியார் ஆலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஈழத்தமிழர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ளன. குண்டு வெடிப்பில் தகர்ந்த நீர்க்கொழும்பு தேவாலயத்தில் இருந்த பெரும்பாலானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்குக் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்பதுடன், படுகாயமுற்றோருக்கு தக்க சிகிச்சை வழங்கிக் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் இலங்கை அரசும், அனைத்துப் பொதுநல அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details