தன் நகைச்சுவை மூலம் சமுகக் கருத்துகளைப் பரப்பி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ’ஜனங்களின் கலைஞன்’ விவேக், மாரடைப்பால் இன்று (ஏப்.17) உயிரிழந்தார். அவருக்கு திரையுலத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக்குக்கு பிரபல ஓவியரும் நடிகருமான ஸ்ரீதர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
’அப்துல் கலாம் அய்யாவின் கனவுகளை நிஜமாக்கிய கலைஞன்’ - ஓவியர் ஸ்ரீதர் இரங்கல் - கோலிவுட் நடிகர் விவேக்
நடிகர் விவேக்குக்கு பிரபல ஓவியர் ஸ்ரீதர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் விவேக்
அதில், “அப்துல் கலாம் அய்யாவின் கனவுகளை நிஜமாக்கிய கலைஞன்... சக கலைஞர்களையும் ஊக்குவித்த மகா கலைஞன்... சகோதரர் விவேக்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:’துணை நடிகர்கள் கூட்டத்துக்கு அடையாளம் நிறுவிய காட் ஃபாதர்’