தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்கப்பட வேண்டுமென முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார்.

judge
judge

By

Published : Jan 12, 2020, 7:24 PM IST

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவி விக்னேஸ்வரனை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எ.கே. ராஜன் ,சண்முகம், அக்பர் அலி, அரிபரந்தாமன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், 'இலங்கை நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி விக்னேஸ்வரனை சந்தித்தோம். அடிப்படையில் அவர் ஓர் அரசியல்வாதி அல்ல, இங்குள்ள சூழல் அவரை அரசியல்வாதியாக மாற்றியதால் முதலமைச்சரானார். ஓய்வுபெற்ற பின்னரும் இவர் மக்கள் பணிகளை செய்து வருகிறார்.

நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்து நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள மக்கள் இவரை எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் தற்பொழுதும் ராணுவம் உள்ளது. இதனால் அவர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனை மீட்டுத் தருவதில் இவரின் பங்கு தேவை என கருதுகிறோம்.

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பு

இலங்கையில் ஏற்கனவே இருந்த ஆட்சி மீண்டும் வந்துள்ளதால், அங்கிருந்து அதிகமானவர்கள் தமிழ்நாடு வரலாம் என நான் கருதுகிறேன். எனவே இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அவர்கள் எங்கு இருக்கப் போகிறார்கள் என்பதை முகாமில் உள்ளவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அங்கு நடைபெறும் தேர்தலின் பொழுதுதான் இரட்டை குடியுரிமை இருக்கக்கூடாது' என்றார்.

இதையும் படிங்க: ஒன்றியத் துணைத்தலைவர் தேர்தலில் நுழைந்த திமுக எம்எல்ஏ - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details