முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 18ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து 45 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அந்த பொருள்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (22) மாலை சென்றடைந்தது. அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே , முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் 40ஆயிரம் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்பவுடர் மற்றும் மருந்துகள் உள்பட 5.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருள்களை இலங்கைக்கு வழங்க தமிழ்நாடு அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிலையில் அதன் முதல் தொகுதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
9ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர் மற்றும் 24 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் முதற்கட்டமாக அனுப்பி வைக்கபப்ட்டுள்ளன. இந்த பொருள்களை கடந்த 18ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சரக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தார்.
அந்த பொருள்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (22) மாலை சென்றடைந்தது. இந்தப் பொருள்கள் வடக்கு, கிழக்கு, தமிழ் மக்களுக்கும், இந்திய வம்சாவளியை சேரந்த தமிழ் மக்களுக்கும், மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு எதிர்வரும் நாள்களில் விநியோகிக்கப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:இலங்கை மக்களுக்கு வழங்கப்பட உள்ள பொருள்கள் பேக்கிங் பணிகள் தீவிரம்